மஹிந்தவின் பகல் கனவைக் கண்டு யாரும் ஏமாற வேண்டாம். முள்ளிநியூஸ்

மஹிந்தவின் பகல் கனவைக் கண்டு யாரும் ஏமாற வேண்டாம்.


ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐக்­கிய தேசிய கட்சி ஆகியன புரிந்­து­ணர்வு அடிப்­ப­டையில் தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்ள நிலையில் பிர­தான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் வரை எவரும் அர­சாங்­கத்தை குழப்­பக்­கூ­டாது.

அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யே­று­வது மக்கள் ஆணையை மீறும் செயற்­பா­டாகும் என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். மஹிந்த ராஜபக் ஷவின் பகல்­க­னவை கண்டு ஏமாந்­து­விட வேண்டாம் என வும் அவர் குறிப்­பிட்டார்.

தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் இருந்து முக்­கிய பிர­மு­கர்கள் வெளி­யே­று­வார்கள் என பொது எதி­ரணி தெரி­வித்­துள்ள நிலையில் நல்­லாட்சி அர­சாங்கம் பாதிக்கப்படுமா என வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

தேசிய அர­சாங்கம் மக்­களின் ஆத­ரவில் பூரண ஜன­நா­யக ரீதியில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் தேசிய அர­சாங்­கத்தை கவிழ்த்து மக்­களின் ஆணைக்கு முர­ணாக ஆட்­சியை கைப்­பற்­றவும் நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த முயற்­சி­கின்­றனர். இந்த ஆண்­டுக்குள் அர­சாங்­கத்தை கவிழ்க்க போவ­தாக கதை­களை பரப்­பு­கின்­றனர் .

அர­சாங்­கத்தை கவிழ்க்க போவ­தாக வெளி­யி­டப்­படும் கருத்­துக்கள் வெறும் கனவு மாத்­தி­ர­மே­யாகும் . இவர்கள் அதி­கார சுவை அறிந்­த­வர்கள். ஆகவே அவர்­க­ளுக்கு அதி­காரம் இல்­லாது ஒரு­நாளைக் கூட கடப்­பது பாரிய சவா­லாக அமைந்­துள்­ளது.

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்தி பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு ஒன்றை எட்டும் மிகவும் தூர நோக்கு பார்­வை­யுடன் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

பிர­தான இரண்டு கட்­சி­க­ளுக்கும் நாட்டின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் பொறுப்பை தட்­டிக்­க­ழிக்­காது செயற்­பட வேண்­டிய பொறுப்பு உள்­ளது.

பிர­தான கட்­சி­களின் புரிந்­து­ணர்வின் அடிப்­ப­டியில் தான் தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டது. ஆகவே மக்­களின் ஆணைக்கும் மக்கள் தேசிய அர­சாங்­கத்தின் மீது வைத்­துள்ள நம்­பிக்­கைக்கும் மதிப்­ப­ளித்து அனை­வரும் செயற்­பட வேண்டும் .

அர­சாங்­கத்தில் உள்ள சில அர­சி­யல்­வா­திகள் பழைய நிலைப்­பாட்டின் அடிப்­ப­டையில் செயற்­பட்­டாலும் சிரேஷ்ட அமைச்­சர்கள் அர­சாங்­கத்தை பாது­காக்க தொடர்ந்தும் நட­வ­டிக்கை எடுப்­பார்கள்.

ஆட்­சியை கைப்­பற்ற முடியும் எனவும் இந்த ஆண்­டுக்குள் மீண்டும் ஆட்­சியை தன­தாக்­கு­வ­தா­கவும் மஹிந்த ராஜபக் தெரி­விக்கும் கருத்­துக்கள் வெறும் பகல் கனவு என்பதை உணர்ந்தும் அவரின் கூட்டணியை பலப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் செல்வார்களாயின் இறுதியில் அவர்களுக்கும் அரசியல் அந்தஸ்து இல்லாது போய்விடும்.ஏமாறாது மக்களுக்காக செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW