உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விருப்பம் - ஜனாதிபதி மைத்திரி முள்ளிநியூஸ்

உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விருப்பம் - ஜனாதிபதி மைத்திரி


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டராம்ப் அரசாங்கத்துடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 45 ஆம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டுள்ள டொனர்ட் ட்ராம்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ட்ராம்ப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதற்கான வாழ்த்துச் செய்தியில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக இலங்கையின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் ஊடாக ஜனாதிபதி இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW