பரக்கத் பெறவேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
எமது வீடுகளில் இல்லாது போன ஓரு சொல் அதை நாம் அதிகமதிகம் கேட்டுக் கொண்டும் தேடிக் கொண்டும் இருக்கின்றோம்… அது தான் பரக்கத்…. (அபிவிருத்தி அல்லது இறை பாக்கியம்)
எமது வாழ்வாதாரத்திலும் எமது நேரத்திலும் பரக்கத் இல்லாமல் போய் உள்ள ஒரு சூழலில் நாமனைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவில் இருந்து பரக்கத்தின் எட்டு திறவுகோள்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது…..
01. அல்குர்ஆன் ஓதுதல்
இந்த வேதத்தை நாம் பரக்கத் நிறைந்தாக இறக்கி அருளினோம்..என எல்லாம் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான்……
நபி (ஸல்) அவர்களும் ‘எந்த வீட்டில் அல்குர்ஆன் ஓதப்படுகின்றதோ அங்கு மலக்குமார்கள் தங்குவர், ஸைத்தான் விரண்டோடுகின்றான், அவரது குடும்பம் விசாலமாக்கப்பட்டு அவரது நலவுகளும் அதிகமாக்கப்படும்.’ என்றார்கள்.
02. பிஸ்மில்லாஹ் எனக்கூறி அல்லாஹ்வை நினைவுபடுத்துதல்
நபியவர்கள் கூறினார்கள்: யார் விட்டினுல் நுழையும் போதும் உணவு உற்கொள்ளும் போதும் அல்லாஹ்வை நினைவுபடுத்தினாறோ..ஸைத்தான் தனது தோழர்களுக்கு சொல்கின்றான் உங்களுக்கு இரவு உணவும், இரவில் தரித்தலும் இந்த வீட்டில் கிடையாது…’
03. ஸதகா: பொதுவாக ஸதகா பரக்கத்தின் வாயில்களை திறந்திடும். குறிப்பாக மறைமுகமாக செய்யப்படும் ஸதகா அல்லாஹ்வின் கோபத்தை தனித்து விடும்….
04. உறவுகளை சேர்ந்து நடத்தல்:
நபியவர்கள் கூறினார்கள்: உறவுகளை சேர்ந்து நடப்பது, நற்குணம், பக்கத்து வீட்டாரோடு நல்லமுறையில் நடப்பது என்பன வாழ்வாதாரத்தில் விஸ்தீரனத்தையும், நீண்ட ஆயுளையும் வழங்கும்.’ என்றார்கள்.
05. வாழ்வாதாரத்தை தேடி காலையில் நேரகாலத்தோடு செல்லுதல்…
பொதுவாக இந்த உம்மத்திற்கு காலைப் பொழுதில் அபிவிருத்தியை கொடுக்குமாறு நபியவர்கள் பிரார்தித்துள்ளார்கள்….
06. தொழுகையை நிலைநாட்டுவது…..
தொழுகையை தாமும் பேணி தனது குடும்பத்திற்கும் தொழுகையை ஏவக்கூடியவர்களிடம் நாம் உணவளிக்குமாறு கேட்காமல் நாமே அவர்களுக்கு உணவளிப்போம், மேலும் இறையச்சத்திற்கே சிறந்த முடிவு உள்ளது. என அல்லாஹ் கூறுகின்றான்.
07. அல்லாஹ் மீது உறுதியான நம்பிக்கை….
உண்மையான அமைப்பில் நீங்கள் அல்லாஹ் மீது உறுதியான நம்பிக்கை (தவக்குல்) வைப்பீர்களேயானால், காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மலையில் வயிற்றை நிறப்பிக் கொண்டு வரும் பறவைகளுக்கு போன்று இறைவன் உங்களுக்கும் உணவளிப்பான்.
08. தொடர் பாவமன்னிப்பு:
யார் தொடந்தும் பாவமன்னிப்பு தேடுகின்றாரோ அவரது எல்லா கஷ்டங்களின் போதும் தீர்வை அல்லாஹ் பெற்றுக் கொடுப்பான், எல்லா கவலைகளையும் போக்கிடுவான், அவர் நினையா புறத்தில் இருந்து அவருக்ககு உணவளிப்பான்.
மேற்படி வழிகாட்டால்களைப் பேணி எமது வீடுகளில் இறை பரக்கத் வந்து சேர வழி சமைப்பபோம்…
எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பாவங்களை மன்னித்து எமக்கு ஈருலக வெற்றியையும் தந்தருள்வானாக!
தமிழாக்கம்: எம். றிஸ்கான் முஸ்தீன்