வெள்ளிக்கிழமை கிண்ணியா முழுவதும் டெங்கு ஒழிப்பு சிரமதானம் ஏற்பாடு
எதிர்வரும் (20 )வெள்ளிக்கிழமை கிண்ணியா நகர சபை,பிரதேச சபை தழுவிய டெங்கு ஒழிப்பு சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலமா சபையின் தலைமையின் கீழ் MOHயின் பார்வையின் கீழ் கிண்ணியாவில் உள்ள அனைத்து பள்ளி நிறுவாகங்களும்,தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து செய்ய முடியு செய்யப்பட்டுள்ளது.
கிண்ணியாவில் மிக விரைவாக டெங்கு நோய் பரவி வருகின்றது ஆகவே அனைத்து பொது மக்களும் தத்தமது காணிகளை துப்பரவு செய்து வீதியோரங்களில் கழிவுகளை போடுவதுடன் அந்த கழிவுகளை உடனுக்குடன் அகற்றும் வாகன ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
டெக்டர்_வாகனங்கள்_இருக்கும்_பொதுமக்களும்_சிறமதானத்துக்காக_வழங்கி_உதவ_வேண்டும்
தயவு செய்து அனைத்து கிண்ணியா வாழ் பொது மக்கள் அன்று ஒத்துழைப்பு தருமாறு கிண்ணியா உலமா சபை கேட்டுள்ளது.