மூன்று எம்பிக்கள் இருந்தும் குறை தீர்க்க ஆளில்லை (கிண்ணியாவில்) முள்ளிநியூஸ்

மூன்று எம்பிக்கள் இருந்தும் குறை தீர்க்க ஆளில்லை (கிண்ணியாவில்)


கிண்ணியா வலய கஸ்டப்பிரதேச பாடசாலையான வான் எல ஆயலியடி பாடசாலையில் 550 மேற்பட்ட பிள்ளைகள் கல்வி பயில்கின்றனர். இப்பாடசாலையில் GCE (A/L) வரையான வகுப்புகள் இருப்பதுடன் 22 பிரிவுகள் இருக்கின்றன.

பாடசாலை ஆளணி பற்றாக்குறை,பெளதீக வளப்பற்றாக்குறை ஏராளமாக காணப்படுகிறது.கடந்த காலங்களில் அப்பாடசாலையில் சுமார் 32ஆசிரியர்கள் இருந்த போதும் தற்போது 16 ஆசிரியர்கள் மாத்திரமே இருக்கின்றனர்.

இது பாடசாலை அபிவிருத்தியில் பாரிய தாக்கம் விளைவிப்பதுடன் இது சம்மந்தமாக எந்த அரசியல் தலமையும் கவணமெடுப்பதாக தெரியவில்லை. இதனால் இப்பாடசாலையின் முன்னேற்றம் கருதி எதிர் வரும் நாட்களில் ஆயலியடி மக்கள் பகிஷர்கரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு வருகின்றனர்.

நகர்ப்புற பாடசாலைகளின் அபிவிருத்தியில் கவனம் செலுத்தும் அரசியல் தலைமைகள் கிராமப்புற பாடசாலைகளில் கவனயீனமாக செயற்படுவது வருத்தமளிப்பதுடன் எதிர்வரும் காலங்களில் பாடசாலை அபிவிருத்திக் குழுவுடன் இணைந்து பாடசாலையின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW