ரணிலால் முடியாவிட்டால் இராஜினாமா செய்ய வேண்டும்: ஆனந்த தேரர்
சோபித தேரர் கனவு கண்ட நல்லாட்சியை நிலை நாட்ட முடியாது போனால் ரணில் விக்கிரமசிங்க இராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.
ஹம்பாந்தோட்டையில் 15000 ஏக்கர் காணி சீனாவுக்கு 99 வருட குத்தைகை ஒப்பந்தத்தில் ஒப்படைக்கும் திட்த்திற்கு எதிர்ப்பு வெளியிடுவதற்காக ஞாயிறன்று மாத்தறையில் கூடியிருந்த சுமார் 500 பௌத்த துறவிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், அடுத்து கொழும்பிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.