பல்கலைக்கழக அனுமதியை துரிதப்படுத்த நடவடிக்கை: ரணில்

உயர்தர கல்வியை நிறைவு செய்த பின் பல்கலைக்கழக அனுமதிக்காக நீண்ட காலம் காத்திருப்பது மாணவர்களைத் திசை திருப்புவதோடு வெளிநாடுகளை நோக்கி நகர வைக்கிறது என ஜே.வி.பி தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து இதனைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
டிசம்பரில் பரீட்சை, ஏப்ரலில் பெறுபேறு ஒக்டோபர் பல்கலை அனுமதி எனும் நடைமுறையே முன்னர் இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் பல்கலைக்கழக நிர்வாகங்களும் இணைந்து இதற்குரிய வழிமுறையை முன்னெடுக்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.