குர்ஆன் பற்றிய கேள்விகளுக்கு, சிங்களமொழியில் பதில் அனுப்புவோம் - ரிஸ்வி முப்தி

பொதுபலசேனா அமைப்பு உலமா சபையிடம் விளக்கம் கோரியுள்ள குர்ஆன் ஆயத்துகளை விடவும் மேலதிகமாக பல ஆயத்துகளின் விளக்கங்களை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபை வழங்கவுள்ளது.
சிங்கள மொழியிலேயே விளக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பு உலமா சபைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்
பதில் கடிதம் பொதுபலசேனாவுக்கு அனுப்பிவைக்கப்படுமா? அல்லது மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைக்கப்படுமா? எனும் தீர்மானங்களை உலமா சபையின் நிர்வாக சபையே தீர்மானிக்கும். எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள் நிர்வாக சபை கூட்டத்தில் இது பற்றி தீர்மானிக்கப்படும்.
குர்ஆனை விமர்சிக்கும் கூட்டம் எல்லாக் காலங்களிலும் இருந்து வந்துள்ளது. குர்ஆனுக்கான விளக்கங்கள் கோரப்பட்டால் விளக்கங்கள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
குர்ஆனைப் பற்றி முழுமையாக தெளிவு பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பொதுபலசேனா கோரியுள்ள விளக்கங்களை விடவும் மேலதிகமாக சில ஆயத்துகளின் விளக்கங்களும் வழங்கப்படவுள்ளன என்றார்.