ரூபா 112 இலட்சம் மோசடி; சரத் குமார கைது முள்ளிநியூஸ்

ரூபா 112 இலட்சம் மோசடி; சரத் குமார கைது


முன்னாள் மீன்பிடி பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன, குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில், நீர்கொழும்பு களப்பு அபிவிருத்திக்காக ஒதுக்கிய ரூபா 112 இலட்சத்தை (ரூ. 1.12 கோடி) மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் இதற்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நால்வரின் பிணையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW