கம்பளை: MWT அனுசரணையில் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

மெர்சி வெல்பெயார் ட்ரெஸ்ட்’ ன் ‘எதிர்கால தலைவர்களை உருவாக்குவோம்’ என்ற தொனிப் பொருளில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வைபமொன்று நேற்று கம்பளையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு அதன் தலைவர் அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக கம்பளை சுமனஜோதி விஹாராதிபதி மதிப்புக்குரிய ரன்தெட்டிய மஹாநாயக்க ஹிமி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சுமார் 125க்கும் மேற்பட்ட பல்லின மாணவ மாணவிகளும் பாடசாலை உபகரணங்கள்ளைப் பெற்றுக் கொண்டனர். கலந்துகொண்ட பிரதம அதிதிகள், கௌரவ அதிகள் நிகழ்ச்சியை சிறப்பாகச் செய்து முடித்த செயற்திட்ட முகாமையாளர்களான அல்-ஹாஜ் எம்.எச்.எம்.றயீஸ் மற்றும் சகோ. எம்.எச்.எம். நழீம் ஆகியோருக்கும் மற்றும் Trend Setters மற்றும் IYMA அமைப்புக்களின் அங்கத்தவர்களுக்கும் நன்றி செலுத்துவதாக ‘மெர்சி வெல்பெயார் ட்ரெஸ்ட்’ ன் செயலாளர் அஷ்-ஷைக் இர்பாத் இமாம்தீன் தெரிவித்துள்ளார்.