கிழக்கு முதலமைச்சரிடம் வேலை வாய்ப்பு பெற்றுத் தர ‘லஞ்சம்’
கிழக்கு மாகாண முதல்வர் ஹாபிஸ் நசீர் மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் நசீரிடம் சிபாரிசு மூலம் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி , முதல்வரின் தீவிர செயற்பாட்டாளர் ஒருவரால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முறையிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு உயர்தர பரீட்சையில் தொழில் நுட்ப பிரிவில் மூன்று பாடங்கள் சித்தியடைந்திருக்கும் பெளசுல் அமீன் மொஹம்மட் றிபாஸ் எனும் இளைஞனே தான் இவ்வாறு லஞ்சம் கொடுத்ததாக தெரிவிக்கின்ற அதேவேளை ஓட்டமாவடி மீராவோடையில் வசிக்கும் முதலமைச்சரின் தீவிர செயற்பாட்டாளரான பாயிதா எனும் பெண்மணியே பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலை வாய்ப்பையும் பெற்றுத்தராது பணத்தையும் திரும்பத் தராது தன்னை ஏமாற்றுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமான உண்மை தகவலினை அறிந்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருக்கும் முதலமைச்சரை தொடர்புகொண்டும் இணைப்பு கிடைக்காததினால் சுகாதார அமைச்சர் நசீர், முதலமைச்சரின் ஊடக செயலாளர் முனாஸ், முதலமைச்சரின் மூத்த சகோதரர் ஹிதாயத்துல்லாஹ், முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கேபிஎஸ்.ஹமீட் ஆகியோர்களை தொடர்பு கொண்டு வினவிய பொழுது முதலமைச்சரோ அல்லது சுகாதார அமைச்சரோ இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை என ஆணித்தரமக தெரிவித்தனர். அத்தோடு பாதிகப்பட்ட நபர் பொலீசிலும், குற்றப்புலானய்வு பிரிவிலும் முறைப்பாடு செய்து தனக்கு நிகழ்ந்துள்ள அநீதிக்கு எதிராக நியாத்தினை பெற்றுக்கொள்வதற்கு தங்களாலான ஒத்துளைப்புக்களை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
–ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்