விசா சர்ச்சை: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம்; ஈரான்

ஈரானிய பிரஜைகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு ஏற்பட்டிருக்கும் தடை விவகாரத்துக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளது ஈரான்.
ஈராக்இ ஈரான்இலிபியாஇ சிரியாஇயெமன்இ சூடான் மற்றும் சோமாலியா ஆகிய ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கும் சட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டிருந்ததன் பின்னணியில் எழுந்திருக்கும் சூழ்நிலை தொடர்பிலேயே ஈரான் இவ்வாறு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என்ற ட்ரம்பின் அறிவிப்பானது முஸ்லிம் உலகத்தின் மீதானஇ குறிப்பாக ஈரான் மீதான வெளிப்படையான அவமரியாதை என்று வர்ணித்துள்ள ஈரான்இ இந்தத் தடையானது தீவிரவாதிகளுக்கான மிகப் பெரும் பரிசாக அமையப் போவதை அமெரிக்கா பின்னர் தெரிந்து கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.