அமைச்சுப் பதவி கொடுத்ததும் தேடி வந்து ‘கும்பிட்ட’ மஹிந்த: சந்திரிக்கா முள்ளிநியூஸ்

அமைச்சுப் பதவி கொடுத்ததும் தேடி வந்து ‘கும்பிட்ட’ மஹிந்த: சந்திரிக்கா


தனது பதவிக் காலத்தின் போது மஹிந்த ராஜபக்சவுக்கு அமைச்சுப் பதவியொன்றைக் கொடுத்ததும் தன்னைத் தேடி வந்து கும்பிட்டு ‘நன்றி’ சொன்னார் என தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.

இப்படிப்பட்டவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியதே தான் வரலாற்றில் செய்த மிகப் பெரிய தவறெனவும் தெரிவித்துள்ள சந்திரிக்கா, அரசாங்கம் இதைவிட வேகமாக செயற்படுவதையே தான் விரும்புவதாகவும் தற்போதைய அமைச்சரவை மந்த கதியிலேயே இயங்குவதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW