வெல்லாவௌியில் விபத்து - இரு இளைஞர்கள் பலி

மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றைய நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், விபத்துக்குள்ளானவர்கள் மண்டூர் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதான இருவராகும்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெல்லாவௌி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.