எனக்கு முதுகில் குத்திப் பழக்கமில்லை: மஹிந்த பதில்!
தான் வெளிநாடு செல்லவுள்ளதால் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அடுத்த வாரம் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்யலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்துள்ள மஹிந்த ராஜபக்ச தனக்கு ஒரு போதும் முதுகில் குத்திப் பழக்கமில்லையென தெரிவித்துள்ளார்.
ஆட்சியைக் கவிழ்க்க ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு செல்லும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமும் தனக்கில்லையென தெரிவித்துள்ள அவர், ரணில் விக்ரமசிங்க நாட்டில் இருக்கும் போதே தன்னால் ஆட்சியைக் கவிழ்க்க முடியும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.