அரசு அல்லது லாரன்ஸ் வந்து பேச வேண்டும் ' - மெரினா போராட்டக்காரர்கள் நிபந்தனை
மெரினா போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் உடனடியாக கலையுமாறு கூறினர். அதற்கு போராட்டக்காரர்கள், அரசின் சார்பில் யாராவது வந்து பேச வேண்டும் அல்லது ராகவா லாரன்ஸ் வந்து தங்களிடம் பேசினால் தாங்கள் கலையத் தயார் என கூறியுள்ளனர். மைலாப்பூர் துணை கமிஷனர் வி.பாலகிருஷ்ணன்தான் லாரன்ஸிடம் பேசியுள்ளதாகவும், அவர் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இப்போது மெரினாவில் திருநங்கைகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடற்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து, போராட்டக்காரர்களை கண்காணித்து வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போராட்டக்களத்துக்கு வந்துள்ளனர்.
மெரினாவில் இந்த நேரத்திலும் போராட்டக்காரர்கள் கடற்கரையில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்தி வருகின்றனர்.