புதிய வீடுகள் நிர்மாணப்பணிகள்
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக லிந்துல ஊட்டுவெலி தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 150 தனி வீடுகளைக் கொண்ட புதிய கிராமத்தின் ஒரு தொகுதி வீடுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆந் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளன.
இதன் நிர்மாணப் பணிகளை அமைச்சர் பழனி திகாம்பரம் நேற்று (22) பார்வையிட்டதுடன் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.