அரசியலில் குதித்து விட்டேன். இனி தீவிர அரசியலில் ஈடுபடுவேன் – தீபா முள்ளிநியூஸ்

அரசியலில் குதித்து விட்டேன். இனி தீவிர அரசியலில் ஈடுபடுவேன் – தீபா



தியாகராய நகரில் உள்ள தீபா வீட்டு முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டனர். 6 மணிக்கு வீட்டில் இருந்து வெளியில் வந்த அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் தீபாவை வாழ்த்தி கோஷமிட்டனர். அவர்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இனிப்புகள் வழங்கப்பட்டது.

எம்ஜிஆரின் 100-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அவரது நினைவிடத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தீபாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதட்டம் நிலவியது.இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் தீபா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது ஆயிரக்கணக்கான தீபா ஆதரவாளர்களான ஆண்களும், பெண்களும் அங்கு குவிந்தனர். இதனால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தீபா வருவதை முன்னிட்டு அவருக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் மெரீனா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் மெரீனா சாலையில் பதட்டம் நிலவியது. அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கும் தீபா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். போதிய பாதுகாப்பு வழங்கப்படாததால், அண்ணா சாலை மற்றும் மெரீனா சாலைகளில் போக்குவத்து நெரிசலும் பதட்டம் நிலவியது.தீபாவின் ஆதரவாளர்கள் வெளிப்படையாக, ”சசிகலா யார்? ஆட்சி நடத்துவதற்கு. பொதுச்செயலாளர் பதவியை விட்டு சசிகலா நீங்க விட வேண்டும். தீபாதான் பதவி ஏற்க வேண்டும்” என்று கோஷம் எழுப்பினார்கள்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆரின் நினைவு இல்லம் மற்றும் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன் பிறகு தீபா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கடந்த ஒரு மாதமாக தினமும் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தினமும் அவர்கள் நம்பிக்கையோடு என்னை வந்து பார்த்தனர். அவர்களது நம்பிக்கையை நான் ஒரு போதும் வீணாக்க மாட்டேன்.ஏற்கனவே நான் அரசியலில் குதித்து விட்டேன். இனி தீவிர அரசியலில் ஈடுபடுவேன். இது பற்றிய முழு விபரங்களையும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது வெளியிடுவேன்.இவ்வாறு தீபா கூறினார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW