ஐந்தம் தர மாணவர்களின் பெற்றோர்களே நீங்களும் கற்பிக்களாம்
தி/கிண்ணியா புஹாரி நகர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் " பெற்றோர்களே நீங்களும் கற்பிக்கலாம்" 5 ஆம் தர மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வொன்று இன்று 09 திங்கட்கிழமை இடம்பெற்றது.
கிண்ணியா வலய முள்ளிப்பொத்தானை கோட்டக் கல்விப் பணிப்பாளார் ஏ.ஆர்.எம்.சுபைர் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் மாணவர்களின் கல்வியில் அக்கரையுடன் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மூலமாக கற்றுகொள்ள வேண்டியவைகள் பற்றியும் விரிவாக விளக்கம் அளிக்கப் பட்டது.
முள்ளிப்பொத்தானையில் உள்ள தி/கிண்/பாளிஹா முஸ்லிம் வித்தியாலயம், ஈச்ச நகர் தி/கிண்/ அல் மதினா முஸ்லிம் வித்தியாலயம் தி/கிண்/ தறுஸ்ஸலாம் முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை உள்வாங்கி தி/கிண்ணியா புஹாரி நகர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தினுடாக இவ்வொன்று கூடல் இடம் பெற்றன.
இதில் இப் பாடசாலை அதிபர்களும் தரம் 5 க்கு கற்பிக்கும் ஆசிரியார்களும் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்