திருகோணமலை கடலில் கரையொதுங்கிய சடலம்

(இஹ்ஸானா- பரீத்)
நேற்று (29) மாலை 5.30 மணியளவில் கடல் குளித்துக் கொண்டிருக்கும் போது காணாமல் போன இரண்டு இளைஞர்களில் ஒருவரின் சடலமே தற்போது கரையொதுங்கியுள்ளது.
இவ்வாறு கரையொதுங்கிய சடலம் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநாயகபுரம், பாடசாலை வீதியைச் சேர்ந்த புவனேந்திரன் ஹேமபிரசாந்தன் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இரண்டாவது நபர், செல்வநாயகபுரம், பாடசாலை வீதியைச் சேர்ந்த துரைராஜா துஷ்யந்தன் (28) என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இவரை தேடும் நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.
நேற்று (29) மாலை கடலில் நீராடச் சென்ற 5 பேரில் மூவர் காணாமல் போனதில் ஒருவரை மீனவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.