மிக் விசாரணையில் கோத்தாவின் ‘உண்மை முகம்’ புலப்படும்: ராஜித முள்ளிநியூஸ்

மிக் விசாரணையில் கோத்தாவின் ‘உண்மை முகம்’ புலப்படும்: ராஜித


மிக் விமானக் கொள்வனவு மோசடி விவகாரம் வெளிவந்ததும் தேசியவாதியாகவும் நாட்டுப்பற்றாளனாகவும் நம்பப்படும் கோத்தபாய ராஜபக்சவின் உண்மை முகம் புலப்படும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

வார இறுதியில் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், முன்னைய அரசின் ஊழல்களை தற்போது மக்கள் மறந்து விட்டதாகவும் நடைமுறை அரசின் மீது போலியான குற்றங்களை முன் வைத்து பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

மிக் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பில் தேடப்படும் முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதர் உதயங்க வெளிநாடுகளில் சுதந்திரமாக நடமாடி வருகின்றமையும் குறித்த விசாரணையில் உதயங்க முக்கிய நபர் எனபதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW