பெண்கள் முகத்தை மறைக்கும் முழுமையான ஆடைகளுக்குத் தடை.!

மொரோக்கோவானது பாதுகாப்புக் காரணங்களுக்காக உடலையும் முகத்தையும் முழுமையாக மறைக்கும் ஆடைகளை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளதாக அந்நாட்டிலிருந்து வெளியான ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எனினும் இது தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கத்தால் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
மேற்படி ஆடைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் ஆளடையாளம் தெரியாது தம்மை மறைத்து குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதை கருத்திற் கொண்டே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக லி360 ஊடகம் கூறுகிறது.
அந்நாட்டு மன்னரான ஆறாம் மொஹமட் பெண்கள் முகத்தை மறைக்காது முக்காடு அணிவதற்கு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.