கிழக்கு மாகாண அதிபர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவிவரும் அதிபர் வெற்றிடங்களுக்காக 360 அதிபர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வியமைச்சின் செயலாளர் ஏ.டபிள்யூ.ஜி. அசங்க அபேவர்த்தன தலைமையில் புதன்கிழமை (25) பிற்பகல் திருகோணமலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண அமைச்சர்களான ஆரியவதி கலபத்தி,ஏ.எல்.எம்.நஸீர், கே. துரைராசசிங்கம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஜே.எம்.லாகீர்,மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் டி.எஸ்.சரத் அபேகுணவர்த்தன, மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.நிசாம்,மாகாண கல்வியமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அகிலா கனகசுரியம்,வலயக்கல்வி பணிப்பாளர் விஜேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.