புத்துயிர் பெற்றிருக்கும் மத்தள விமான நிலையம் முள்ளிநியூஸ்

புத்துயிர் பெற்றிருக்கும் மத்தள விமான நிலையம்


பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய ஓடுபாதை புனரமைப்புப் பணிகளினால் நஷ்டத்தில் இயங்கி கைவிடப்படும் நிலையை எட்டியிருந்த மத்தள விமான நிலையம் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது.

இக்காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் உட்பட சுமார் 14 வெளிநாட்டு விமான சேவைகள் மத்தள விமான நிலையத்தை உபயோகப்படுத்த ஆரம்பித்திருப்பதால் அங்கு மீண்டும் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் இது தற்காலிக செயற்பாடாகவே இருக்கும் எனவும் மத்தள விமான நிலையம் அமைந்துள்ள பகுதி பலத்த காற்று மற்றும் அசௌகரியமான சூழலில் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW