முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பிரதான வீதி அவலம் மக்கள் சிரமம்

திருகோணமலை மாவட்டத்தில் முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பிரதான வீதிக்கு வடிகான் இன்மையால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இப் பகுதியில் சுமார் ஏழு நாட்களாக விடாது பெய்து வரும் அடை மழையால் வெள்ள நீர் வீட்டுக்கு போய் முதியோர் நோயாளிகள் சிறுவர்கள் குழந்தைகள் பெரும் அவஸ்த்தைக்குள்ளாகி வருகின்றனர்.
இவர்கள் துயர் துடைப்பார் யாரென்ன என ஏங்குகின்றர்கள் இப்பிரதேச மக்கள்
முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பிரதான வீதியானது முழுமையாக காபட் இடுவதற்க்கு தகுதி பெறப்பட்டிருந்தது.
இந் நிலையில் சில விஷமிகளின் நடவடிக்கையினால் இது அரைவாசி மட்டுமே தற்போது காபட் இடப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர் .
இப் பிரதேச வாசிகள் இந்த வீதி முழுமையடைந்து இருந்தால் அதற்கான வடிகான் கல்வெட்டுக்கள் என்பன செய்யப்பட்டு இருக்கும்.
இதன் மூலம் மழை நீர் விரைந்தோடிருக்கும் எனவே. மக்களுக்கு இன்னிலை வந்திருக்காது என மக்கள் மன வேதனையுடன் தெரிவித்தனர்.



அனுப்புனர்:- JAISAR