திருகோணமலை மக்களிற்கு அவசர எச்சரிக்கை முள்ளிநியூஸ்

திருகோணமலை மக்களிற்கு அவசர எச்சரிக்கை


திருகோணமலை பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள வர்தா புயலின் தாக்கத்தின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இப்பகுதியில் காற்றானது மணிக்கு 1௦௦ கிலோமீட்டர் வேகத்துடன் வீசும் என எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது.

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மீனவர்கள் எவரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை கேட்டுக்கோண்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW