இன்றுமுதல் பல்கலைக்கழக அனுமதி கையேடுகளை, பெற்றுக்கொள்ள முடியும் முள்ளிநியூஸ்

இன்றுமுதல் பல்கலைக்கழக அனுமதி கையேடுகளை, பெற்றுக்கொள்ள முடியும்

இன்றுமுதல் பல்கலைக்கழக அனுமதி கையேடுகளை, பெற்றுக்கொள்ள முடியும்

இன்று முதல் பல்கலைக்கழக அனுமதிக் கையேடுகளை நாடுபூராகவுமுள்ள பிரதான புத்தக விற்பனை நிலையங்களில் மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும் புதிய கல்வி ஆண்டுக்கான, பல்கலைக்கழக அனுமதிக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய அடுத்த 20ம் திகதி வரை (20.02.2017) பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க முடியும் என, பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது இணையத்தின் மூலம் மட்டுமே இடம்பெறும் என்பதால், www.ugc.ac.lk என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW