காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயின் தாக்கம் அதிகரிப்பு..... முள்ளிநியூஸ்

காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயின் தாக்கம் அதிகரிப்பு.....


உறுதியான காரணம் கண்டறியப்படாத சிறுநீரக் நோய் தாக்கம் அதிகரித்து வருவதாக சிறுநீரக நோய் தடுப்பிற்கான ஜனாதிபதி செயளணி தெரிவிக்கின்றது.

இந்நோயளர்கள் வவுனிய செட்டிக்குளம், பொலன்னறுவை, மதவாச்சி, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயளணி ஏற்படு செய்திருந்த ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW