தொழிற்சாலைகளை மொனராகலைக்குத் தாருங்கள்: விஜேமுனி
ஹம்பாந்தோட்டையில் கைத்தொழில் வலயம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமையை எதிர்த்து கூட்டு எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்திருந்த நிலையில் ஹம்பாந்தோட்டைக்குத் தொழிற்சாலைகள் வேண்டாமெனில் அவற்றை மொனராகலையில் அமைத்துத் தாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் அமைச்சர் விஜேமுனி சொய்சா.
நீதிமன்ற உத்தரவையும் மீறி நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாமல் ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் கண்ணீர்ப் புகை மற்றும் தண்ணீர்ப் பிரியோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் 21 பேர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.