அறிக்கையை ஏற்றுக்கொள்க: பைசருக்கு சட்ட ஆலோசனை
ஐந்து பேர் கொண்ட குழுவில் ஐக்கிய தேசிய கட்சிப் பிரதிநிதி மாத்திரமே கையொப்பமிட எஞ்சியுள்ள நிலையில் ஐவரும் கையொப்பமிட்டதும் மேலதிக தாமதமின்றி குறித்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஐவரும் கையொப்பமிடாத நிலையில் தான் அறிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென பைசர் தெரிவித்திருந்த நிலையில் சு.க சார்பில் கையொப்பமிடப்பட்டுள்ள அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கீகாரத்துக்காக காத்திருப்பதாக அமைச்சு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.