கிண்ணியா தள வைத்தியசாலையில் புறம்பான அவசர சிகிச்சைப் பிரிவு
கிண்ணியா தள வைத்தியசாலையில் தற்போது இயங்கி வருகின்ற அவசர சிகிச்சை பிரிவினை முறையான சகல வசதிகளுடன் புறம்பாக இயங்கும் அவசர சிகிச்சை பிரிவொன்றினை அமைக்கவுள்ளதாக மத்திய சுகாதார பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளரும்,முன்னால் கிழக்கு மாகாண தவிசாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.
கிண்ணியா தள வைத்தியசாலையில் பாரிய குறைபாடாக இருந்து வருகின்ற அவசர சிகிச்சை பிரிவினை தனியான சிகிச்சை பிரிவாக அமைத்து 24 மணித்தியாலங்களும் வைத்தியர்கள்,தாதியர்கள் பிரசன்னமாகி அவசர சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகின்ற நோயாளிகளை சிகிச்சைக்கு உட்படுத்தி அவர்களுக்குத் தேவையான வைத்திய சேவையினை வழங்கும் ஏற்பாடுகளுக்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
சமீபத்தில் வைத்தியசாலைக்கு நேரடியாக விஜயமொன்றினை மேற்கொண்ட வேளையில் வைத்திய பொறுப்பதிகாரி சமீம் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் நிமித்தம் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீமை தொடர்பு கொண்டு 10 மில்லியன் நிதியொதுக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அதேவேளை மூதூர் தள வைத்தியசாலைக்கும் இவ்வாறான திட்டத்திக்கு நிதியொதுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேச மக்களுடைய பிரதான தேவையாக இருந்து வருவதும், விமர்சனத்துக்குமுரியதுமாக பேசப்பட்டுவரும் இவ்விடயம் அவசர சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகின்ற நோயாளிகளை கவனிப்பதற்கான வைத்தியர்கள் பிரசன்னமாகி இருப்பதில்லை என்ற குறைபாடும் அவர்களுக்கான வைத்திய சேவையினை வழங்கவில்லை என்ற வைத்தியர்களை குறைகண்டு வருகின்ற விடயமும் பேசு பொருளாக உள்ளன அதற்கு முற்றுப்புள்ளி வைத்து நோயாளிகளை உடன் சிகிச்சைக்கு உட்படுத்தும் வண்ணம் இப்பிரிவு உடன் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.