புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயத்தில் 09 ஆசிரியர்கள் பற்றாக்குறை

திருகோணமலை கல்வி வலயத்திற்குற்பட்ட புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயத்தில் 01ம் தரம் தொடக்கம் 11ம் தரம் வரைக்கும் 265 மாணவர்கள் பயின்று வருவதாகவும் 07 ஆசிரியர்கள் நியமிக்கப்ட்டுள்ளதாகவும் வெற்றிடமாக காணப்படுகின்ற 09 ஆசிரியர்களையும் நியமிக்குமாறு கோரி 04 சங்கங்களின் ஊடாக நேற்று (23)மகஜரொன்றினை வழங்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை அபிவிருத்தி சங்கம்,கிராம அபிவிருத்தி சங்கம்,கிராமிய கடற்றொழில் சங்கம்.முஹைதீன் ஜூம்மா பள்ளி வாசல் ஆகிய சங்கங்கள் இணைந்து கிழக்கு மாகாண ஆளுனர்,கிழக்கு மாகாண முதலமைச்சர்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்,மாகாண கல்விப்பணிப்பாளர். வலயக்கல்விப்பணிப்பாளர் ஆகியோருக்கு மகஜர்களை வழங்கியுள்ளனர்.
இம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது- புடவைக்கட்டு முஸ்லிம் மஹா வித்தியாலயம் தரம் 1தொடக்கம் 11 வரையான வகுப்புக்களை கொண்டியங்கும் 02ம் தரப்பாடசாலையாகும்.
அத்துடன் 265 மாணவர்கள் வரை கல்வி பயிலும் ஓர் அதிகஷ்ட பாடசாலையாகும். இப்பாடசாலையின்
ஆரம்ப பிரிவு மற்றும் இடைநிலைப்பிரிவுகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவிவருகின்றது.
இந்நிலை பற்றி உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் எதுவித பலனையும் இப்பாடசாலை மாணவர்கள் அடைவதாக இல்லை. கடந்த 2015-02-10ம் திகதி தொடக்கம் இன்று வரை வலயக்கல்வி பணிப்பாளறூடாக மாகாணக்கல்வி பணிப்பாளர்,கல்வி செயலாளர்.முதலமைச்சர் போன்றவர்களுக்கு மனு கொடுத்தும் நேிரில் சென்று கதைத்தும் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய தினத்தில் கூட தரம் 11இற்கு இரண்டு பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அதிபருக்கு தெரயாமலேயே தற்காலிக இடமாற்றம் வழங்கப்ட்டுள்ளது.
எனவே இப்பாடசாலையின் நிலையினை கருத்திற்கொண்டு ஆரம்ப பிரிவு ஆசிரியர் 02 விஞ்ஞான ஆசிரியர் 01 கணிதம் 01 வாழ்க்கைத்தேர்ச்சி 01 சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடத்திற்கு 01 ஆசிரியரையும் நியமித்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன் என அம்மகஜரில் தெரிவிக்கப்ட்டுள்ளது.