நல்லாட்சியில் ‘ஊழல்’ அதிகரிப்பு: CPI அறிக்கை முள்ளிநியூஸ்

நல்லாட்சியில் ‘ஊழல்’ அதிகரிப்பு: CPI அறிக்கை


இலங்கையில் 2015ம் ஆண்டை விட 2016ல் ஊழல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது Transparency Internationa அமைப்பு.

அவ்வமைப்பினால் வருடாந்தம் வெளியிடப்படும் Corruption Perception Index (CPI) சர்வதேச அறிக்கையில் 2016ம் ஆண்டில் 176 நாடுகளுக்கு மத்தியில் 95வது இடத்தைப் பிடித்துள்ளது இலங்கை.

2015ல் 83வது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் 2016ல் இலங்கை 95வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. எனினும், முன்னைய அரசில் நிலவிய ஊழலை ஒழித்து நல்லாட்சியைக் கட்டியெழுப்பியுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.



அரச நிறுவனங்கள், திணைக்களங்களில் நிலவும் ஊழல் நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டே இவ்வறிக்கை வருடாந்தம் தயாரிக்கப்படுகின்றமையும் டென்மார் மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகள் ஊழல் குறைந்த நாடுகளில் முதன்மை பெற்றுள்ளமையும் சிங்கப்பூருக்கு ஏழாவது இடமும், இந்தியா இலங்கையை விட ஊழல் குறைந்த நாடாக 79ஆவது இடத்திலும் நிரல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW