GSP+ தேசிய அரசுக்குக் கிடைத்த வெற்றி: பிரதமர் முள்ளிநியூஸ்

GSP+ தேசிய அரசுக்குக் கிடைத்த வெற்றி: பிரதமர்


இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைத் தருவதற்கு ஐரோப்பிய யூனியனில் இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில் இது தேசிய அரசுக்குக் கிடைத்த வெற்றியென தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

கடந்த இரு வருடங்களாக ஜனநாயகத்தைக் காப்பாற்றவும் மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும் அரசாங்கம் மேற்கொண்டு வந்த முயற்சிகளின் விளைவிலேயே ஜி.எஸ்.பி பிளஸ் மீளக் கிடைக்கப்பேவதற்கான காரணியென தெரிவித்துள்ள அவர், இதன் மூலம் உள்நாட்டு உற்பத்திகள் ஐரோப்பிய சந்தையை அடைவதற்கு வழி பிறந்திருப்பதாகவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பைத் தரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் ஆட்சேபனைகள் எதுவும் தெரிவிக்கப்படாத விடத்து முழுமையான ஜி.எஸ்.பி பிளஸ் பயனை இலங்கை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW