முள்ளிப்பொத்தானை சதாம் நகர் வீதிகள் பல புனரமைப்பு பணிகள் இன்று -அன்வர் MPC முள்ளிநியூஸ்

முள்ளிப்பொத்தானை சதாம் நகர் வீதிகள் பல புனரமைப்பு பணிகள் இன்று -அன்வர் MPC


திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை சதாம் நகர் வீதிகள் பல புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுக்களின் தலைவருமான ஆர்.எம்.அன்வர் அவருடைய மாகாண அமைச்சின் நிதியிலிருந்து இப் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை சதாம் நகர் பிரதான வீதி 150 மீற்றரும்,

சதாம் நகர் வைத்திய சாலை வீதி 120 மீற்றரும், சதாம் நகர் சுகப்த்தா பால வீதி 150 மீற்றர் வீதியும்,

அஸ்ஸலா பாடசாலை வீதி 300 மீற்றரும் இப் புனரமைப்பு வேலைகள்
இணைப்பு செயலாளர் ஐயுப்கான் ஆசிரியர் ,
ஏ.எச்.ரஹீம்.
ஏ.செளத் ஆகியோரின் தலைமையின் கீழ்
இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இது குறித்து பிரதேச மக்கள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்






நன்றி - அனுப்புனர்
A.ஆவுகூரைரா

Editorial Team
(இஹ்ஸானா- பரீத்)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW