ஒளிந்திருந்து வெட்டிய கணவன்... 21 வயது மனைவி படுகாயம். #இலங்கை முள்ளிநியூஸ்

ஒளிந்திருந்து வெட்டிய கணவன்... 21 வயது மனைவி படுகாயம். #இலங்கை


கணவன் கத்தியால் தாக்கியதில் படுகாயமடைந்த பெண் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பழைய சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு வயது குழந்தையின் தாயான வடிவேல் தமயந்தி(21 வயது) எனும் பெண்ணே இவ்வாறு கணவனால் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான பெண் தனது கணவனுடன் முரண்பட்டு நீதிமன்ற வழக்கின் உத்தரவின் அடிப்படையில் மாதாந்தம் உதவித் தொகை பெற்று வந்துள்ளார். இந்த பெண் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

எனினும் சில மாதமாக மனைவிக்கு செலுத்த வேண்டிய தொகையினை வழங்க தவறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அந்த பெண்ணின் கணவன் நேற்று குழந்தையை பார்ப்பதற்காக வந்துள்ளார். இதன்போது பெண்ணின் பெற்றோரிடம் அப்பெண்ணை வெட்டுவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை பெண்ணின் கணவன் ஒளிந்திருந்து கத்தியால் வெட்டியதில், அந்த பெண் தலையில் படு காயத்துடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக படுகாயமடைந்த பெண்ணின் கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸாரால் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW