கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. முள்ளிநியூஸ்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.


கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள்  நியமனம் தொடர்பாக விசேட சந்திப்பொன்று நேற்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் காரியாலத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி அவர்களை அவரது அலுவலகத்தில்  இச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இச் சந்திப்பு கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.அனீஸ் தலைமையில் குழுவினர் இடம்பெற்றனர்.

இதன் போது மத்திய கல்வி அமைச்சிலிருந்து 445 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
க.பொ.த உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்கள் சித்தியடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

2007 ஆம் ஆண்டுக்கு முன்பு மூன்று வருடங்கள் தொடர்சியாக கற்பித்திருக்க வேண்டும்.

  • நியமனம் கிடைக்கும் பாடசாலைகளில் 10 வருடங்கள் இடமாற்றம் பெறாது சேவையாற்றவேண்டும்.
  • இவர்களுக்கான நியமனம் ஒரு வாரத்திற்குள் துரித கெதியில் வழங்கப்படும்
  • இதில் முதலாம் கட்டமாக 445 பேருக்கு வழங்கப் படும்,
  • அடுத்த கட்டமாக 135 பேருக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் அதற்கான அனுமதி பிறப்பட்டுள்ளதாகவும் எனவும்.
  • இது தொடர்பாக கல்வி பிரதி அமைச்சர் இராத கிருஷ்ணனிடம் பேசப்பட்டுள்ளது.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW