இலங்கை நிர்வாக சேவை ஆட்சேர்ப்பு வயதெல்லை 32ஆக அதிகரிக்கப்பட வேண்டும்
இலங்கை நிர்வாக சேவைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளின் வயதெல்லையை 32 ஆக உயர்த்துமாறுகோரி ஜனாதிபதி மற்றும் பொது நிர்வாக முகாமைத்துவ அமைச்சுக்கு மனு தாக்கல் செய்யப்பட்ட வேண்டுமென மக்கள் பிரதிநிதிகளிடம் வேலயைற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்
இலங்கை நிர்வாக சேவை தரம் 111 இற்காக ஆட்சேர்ப்பிற்கான வயதெல்லை 28 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றமையானது பல ஆர்வமுள்ள பட்டதாரிகளுக்கு பெரும் இழப்பாக விளங்குகிறது
2017.02.17 ஆம் திகதிக்கான வர்த்தமானியில் இலங்கை நிருவாக சேவையில் நிலவும் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் விண்ணப்பதாரிகளின் உயர்ந்தபட்ச வயதெல்லை 28 எனக் குறிப்பிடப்படப்பட்டிருப்பது பல பட்டதாரிகளை விண்ணப்பிக்க முடியாதளவுக்கு பாதித்துள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் விண்ணப்பிப்பதாயின் மிகக் குறைந்தளவு பட்டதாரிகளே விண்ணப்பிக்க முடியும் அதிகமான வெற்றிடங்கள் உள்ள போதும் குறைந்தளவு பட்டதாரிகளுக்கு சந்தர்பத்தை வழங்குவது வேலையற்ற அதிகமான பட்டதாரிகளைப் பாதிக்கும்
இந்நிலையில், இலங்கை சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றபோது இளம் பட்டதாரிகளை பாதிக்காத வகையில் வயதெல்லையை 32 ஆக அதிகரிக்கும் வகையில் ஏற்ற ஒழுங்குகளைச் செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடப்பட வேண்டும்