காருக்குள் நடிகை பாவனாவிற்கு இரண்டு மணி நேரம் பாலியல் தொல்லை! முள்ளிநியூஸ்

காருக்குள் நடிகை பாவனாவிற்கு இரண்டு மணி நேரம் பாலியல் தொல்லை!



தன்னை சிலர் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்­த­தாக பிர­பல நடிகை பாவனா பொலிஸ் நிலை­யத்தில் முறைப்பாடு கொடுத்­துள்ளார்.

கடந்த வெள்ளிக்­கி­ழமை இரவு நடிகை பாவனா எர்­ணா­குளம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்­துள்ளார்.

அதில் மூன்று பேர் தன்னைக் கடத்திக் கொண்டு போய் பாலியல் தொல்லை கொடுத்­த­தாகக் கூறி­யுள்ளார். மூன்று பேரில் ஒருவர் சுனில். இவர் பாவ­னாவின் கார் சார­தி­யாக இருந்­தவர். தான் இல்­லாத நேரங்­களில் வேறு சார­தி­களை பாவ­னா­வுக்­காக அமர்த்திக் கொடுப்­பாராம். கடந்த வெள்ளிக்­கி­ழமை இரவு சுனில் ஏற்­பாடு செய்த சாரதி பாவ­னாவின் காரை ஓட்டி வந்­தாராம். அப்­போது வேறு இருவர் வலுக்­கட்­டா­ய­மாக அந்தக் காரில் ஏறிக் கொண்­டார்­களாம். கிட்­டத்­தட்ட இரண்டு மணி நேரம் காரில் பாவ­னா­வுக்கு பாலியல் தொல்லை கொடுத்­துள்­ளனர் மூவரும். தாங்கள் விரும்­பிய வகையில் விதம் வித­மாக பாவ­னாவை போட்­டோ­வுக்கு போஸ் கொடுக்க வைத்­துள்­ளனர்.

பின்னர் இரவு 10 மணி­ய­ளவில் பாவ­னாவை அவரின் நண்பர் வீட்­ட­ருகில் இறக்­கி­விட்டு சென்­று­விட்­டார்­களாம். நடந்த சம்­ப­வங்­களை நண்­பரின் துணை­யுடன் பொலிஸில் விவ­ரித்த பாவனா, இது­கு­றித்த முறைப்பாடையும் கொடுத்­துள்ளார். அதன்­பேரில் குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றவர்களை பொலிஸார் தேடி வருகிறார்கள்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW