டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி
டிப்பர் ரக லொறி ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த நபர் லொறியை முந்திச் செல்ல முற்பட்டபோது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (04) பிற்பகல் 5.00 மணியளவில், பதுளை - கொழும்பு வீதியில், இரத்தினபுரி, பதுல்பான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள குறித்த விபத்தின்போது, இரத்தினபுரி நோக்கி வந்த லொறி, குறித்த நபரின் தலைப் பகுதியில் ஏறியதால் குறித்த நபர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் திம்புல்வல, காவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான அமரநாத் கம்லத் என்பவரே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் குறித்து இரத்தினபுரி பொலிசார் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் தற்போது இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இன்று (05) பிரேத பரிசோதனை இடம்பெறும் என பொலிஸார் தெரிவித்தனர்.