கிண்ணியா வைத்தியசாலையில் கட்டில்கள் தட்டுப்பாடு டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டோர் அவல நிலை. முள்ளிநியூஸ்

கிண்ணியா வைத்தியசாலையில் கட்டில்கள் தட்டுப்பாடு டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டோர் அவல நிலை.





டெங்கு நோயினால் எமது கிண்ணியா தள வைத்தியசாலையில் நோயாழிகளுக்கு கட்டில்கள் தட்டுப்பாடு எனப் பரவலாக சுமத்தப்படும் குற்றச்சாட்டிற்கு நாம் விடை தேடினால் கிண்ணியாவின் மிகப்பெரிய நிர்வாகத் திறமையின்மை அல்லது பொடிபோக்குத்தனம் என்பது இதனுல் ஒழிந்துள்ளது.

இரண்டு வார்ட்டுகள் முழுமையாக மூடப்பட்டு களஞ்சியசாலையாகப் பயன்படுத்தப் படுவதைக் காணமுடியும்.
இந்த அவல நிலைக்கு என்ன சாக்குப் போக்கைக் கூறினாலும் தொடர்ச்சியாக இருந்து வருகின்ற வைத்தியசாலை நிறுவாகிகள் திறமையாகச் செயற்படாமையே முக்கிய காரணியாகச் சொல்ல முடியும்.
இருக்கும் வழங்களைச் சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தாமைக்கும் தேவையான களஞ்சிய வசதிகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளாமைக்கும் காரணமாகும் நிறுவாக நிலமைகலை விட வேரு எதைச் சொல்ல முடியும்.

எனவே இனியும் காலம் தாழ்த்தாது உரிய நடவடிக்கையை பொருப்பு வாய்ந்த அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென்று கிண்ணியா மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW