கிண்ணியாவில் டெங்குக் காய்ச்சலினால் உயிரிழப்புகள்
கிண்ணியா, 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய எம்.ஜே. இப்திசாம் என்ற யுவதி, டெங்குக் காய்ச்சலினால் நேற்று , சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவியான இவர், இரண்டாவது தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விண்ணப்பித்திருக்கின்றார்.
இத்தோடு டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோர் தொகை இரண்டாகும்.
கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலினால் 316 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.அஜீத் தெரிவித்தார்.
mullinews1st media:-
(இஹ்ஸானா- பரீத்)