ஐக்கிய தேசியக் கட்சியை மீள் கட்டமைக்க ரணில் உத்தரவு முள்ளிநியூஸ்

ஐக்கிய தேசியக் கட்சியை மீள் கட்டமைக்க ரணில் உத்தரவு



கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அரச நிர்வாகத்தில் ஈடுபடும் அதேவேளை கட்சியை மீள் கட்டமைக்கும் பணிகளைச் செய்வதற்கான திட்டம் ஒன்றைத் தயாரித்து அதனை செயற்படுத்துவதற்கான குழுவொன்றையும் நியமிக்க உத்தரவிட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இதனடிப்பமையில் புதிய செயற்பாட்டுக்கான திட்டமும் அதனை செயற்படுத்துவதற்கான செயற்குழுவொன்றும் திங்கட்கிழமைக்குள் பரிந்துரைக்கப்பட வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சித் தேர்தல் எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தயார்படுத்தலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW