கட்டுத்துவக்கு, கத்தி, வெடி பொருட்களுடன் 03 முஸ்லிம் இளைஞர்கள் கைது முள்ளிநியூஸ்

கட்டுத்துவக்கு, கத்தி, வெடி பொருட்களுடன் 03 முஸ்லிம் இளைஞர்கள் கைது





திருகோணமலை-அடம்பன பகுதியில் முற்சக்கர வண்டியில் கட்டுத்துவக்கு.வெடி பொருட்களுடன் மற்றும் டை செய்யப்பட்ட கத்திகளுடன் மூன்று பேரை இன்று (26) அதிகாலை கைது செய்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

குச்சவௌி பிரதேசத்திலிருந்து முற்சக்கர வண்டியில் வந்தவர்களை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்ட போது இப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குச்சவௌி, காசீம் நகர், ஜாயா நகர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் 03 பேரையும் இன்று திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW