கிண்ணியா சூரங்கால் வரை பஸ் சேவையை ஏற்படுத்துமாறு கோரிக்கை முள்ளிநியூஸ்

கிண்ணியா சூரங்கால் வரை பஸ் சேவையை ஏற்படுத்துமாறு கோரிக்கை




திருகோணமலையிருந்து கிண்ணியா வீதியினூடாக,மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று ,பொத்துவில்,அம்பாறை, பதுளை,மற்றும் மொனராகல போன்ற பிரதேசங்களுக்கும் அரசாங்க மற்றும் தனியார் பஸ் சேவைகளும் நடைபெறுகிறது,

ஆனாலும் இந்த சேவை கிண்ணியா பிரதேச மக்கள் தமது பயணங்களை மேற்கொள்வதில் பல சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர்.நீண்ட தூர சேவையில் ஈடுபடுகின்ற பஸ்கள் கிண்ணியா துறையடி வீதியினூடாக செல்வதால் வான்எல, சூரங்ஙல், நடுஊற்று, மணிராசங்குளம், ஆலங்கேணி, குரங்குபாஞ்சான், சுங்கான்குழி,காக்காமுனை,குறிஞ்சாக்கேணி,மற்றும் கச்சக்கொடித்தீவு பிரதேச மக்கள் பல சிரமங்களையும் அசௌகரியங்களையும் மேற்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களிலிருந்து முச்சக்கரவண்டிக்கு முந்நூறு,நானூறு ரூபாய் பணத்தினை செலுத்தி கிண்ணியா பிரதான தோணா பழைய ஆஸ்பத்திரி சந்திக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே திருமலையிலிருந்து செல்கின்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான, அல்லது தனியார் பஸ்களை சூரங்ஙல் சந்திக்கு சென்று அங்குள்ள தூரபிரயாணம் செய்யக்கூடிய மக்களை ஏற்றிச்சென்றால் இலேசாக இருக்கும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த வசுவண்டச்சேவையை சூரங்ஙல் வரையாவது செல்ல உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW