''பாடம் கற்கவேண்டிய முஸ்லிம் Mp க்கள்'' - விமல் பிடிவாதம் பிடிக்க, இதுதான் காரணம்..! முள்ளிநியூஸ்

''பாடம் கற்கவேண்டிய முஸ்லிம் Mp க்கள்'' - விமல் பிடிவாதம் பிடிக்க, இதுதான் காரணம்..!


நாடாளுமன்றில் கூடுதல் நேரம் உரையாற்ற வேண்டும் என்ற நோக்கில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சுயாதீனமாகியுள்ளதாக என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சி நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தது.

கூடுதலான நேரம் நாடாளுமன்றில் உரையாற்றுவதனை நோக்காக கொண்டு இவ்வாறு விமல் வீரவன்ச சுயாதீனமாகியுள்ளார் என அமைச்சர் அமுனுகம கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கூடுதலாக பேசுவதற்கு நேரம் தேவை என்றால் வாசுதேவ நாணயக்கார மற்றும் டலஸ் அழப்பெரும ஆகியோரின் நேரத்தை பயன்படுத்திக் கொண்டு விமல் வீரவன்ச உரையாற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மரபு நியதிகளுக்கு அனைவரும் மரியாதை செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை தற்போதைய பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் எம்.பி.க்கள் உள்ளனர். இந்த பாராளுமன்றம் அமைக்கப்பட்டு 2 வருங்களாகிவிட்டன.

இந்த முஸ்லிம் எம்.பி.க்களில் சிலர், பாராளுமன்றத்தில் இந்த 2 வருடங்களில் இதுவரை 2 நிமிடங்கள்கூட (எது தொடர்பிலும்) பேசாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW