(படங்கள்) வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். முள்ளிநியூஸ்

(படங்கள்) வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

(6வது) ஆறாவது நாளாகவும் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவுக்கு அருகாமையில் சத்தியாக்கிரகப் போராட்டத்தினைத் தொடர்ந்து வரும் வேலையற்ற பட்டதாரிகளை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும் ,புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று 26 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

வேலையற்ற பட்டதாரிகளுடன் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ....

கடந்த ஐந்து வருடங்களாக இதுவரையில் வேலை பெறாமல் இருக்கின்ற ஆயிரக்கணக்கான மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் இன்று (6வது) நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தினைத் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையிலே இந்தப் போராட்டம் மிகவும் நியாயமானது.

ஏனென்றால் பல்வேறுபட்ட சிரமங்களுக்கு மத்தியில் பல வருடங்களை கழித்து பட்டம் பெற்றுவிட்டு இதுவரையில் அவர்கள் அரச தொழிலை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது ஓர் துர்பாக்கிய நிலமையாகும்.

அவர்களுடைய நிலமைகளை பார்க்கும் பொழுது நானும் கவலையடைகின்றேன்.

ஆகவே இந்த பிரச்சினைகள் தொடர்பாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும்,விஷேடமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நான் கலந்துரையாடி இவர்கள் தொடர்பான விடயத்தை அவர்களுடைய கவனத்திற்கு கொண்டுவந்து இந்த நிலமையை விளங்கப்படுத்தி முடியுமான வரையில் இவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிப்பேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.








செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW