வீட்டுக்குள் ஒளிந்திருந்து ஆசிரியையிடம் கொள்ளையடித்த திருடன். இது கட்டுகஸ்தோட்டையில். முள்ளிநியூஸ்

வீட்டுக்குள் ஒளிந்திருந்து ஆசிரியையிடம் கொள்ளையடித்த திருடன். இது கட்டுகஸ்தோட்டையில்.


கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்கட்பட்ட நுகவெல பிரதேசத்தில் வீடு ஒன்றுக்குள் புகுந்து ஒளிந்திருந்த கொள்ளைக் காரன் ஒருவன் அவ் வீட்டின் வசிக்கும் ஆசிரியை வீடு திரும்பிய பின் கூறிய கத்தியைக் காட்டி மிறட்டி சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெருமதியுள்ள தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலகெதர பிரதேச பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் இவ் ஆசிரியை கடந்த வௌ்ளிக் கிழமை 4 மணி அளவில் வீட்டுக்கு திரும்பி தனது வீட்டின் கதவை திறந்து வீட்டுக்குள் நுலைந்ததுடன் அங்கு ஔித்திருந்த கொள்ளைக் காரண் அவருக்கு கூறிய கத்தியொன்றை காட்டி மிறட்டி அவரது கலுத்தில் இருந்த சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெருமதியான தங்கச் சங்கிலியை கொள்ளையடித்த பின் பின் கதவை உடைதது அதநூடாக தப்பிச் சென்றுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக கட்டுகஸதோட்டை பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW