நாய்க்கடிக்குள்ளான சிறுவன் இரண்டு மாதங்களின் பின் மரணம் முள்ளிநியூஸ்

நாய்க்கடிக்குள்ளான சிறுவன் இரண்டு மாதங்களின் பின் மரணம்



கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை கோவிலுக்கு அருகில் தமது நன்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது நாய்க்கடிக்குள்ளாகியுள்ள 10 வயதுச் சிறுவன் ஒருவன் இரண்டு மாதங்களுக்கு பிறகு சுகயீனம் காரணமாக நேற்று முன் தினம் மரணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் மடுல்கலை ஹாகல தோட்டத்தை சேர்ந்த தயானந்தன் சந்தோஷ் என்ற 10 வயது சிறுவனாகும்.

தோட்டப் பிரதேசங்களில் கட்டாக்காளி நாய்களது தொல்லையும் குரங்குகளது தொல்லையும் அதிகாக உள்ளதாக அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டியமைக்கமைவாக வைத்திய அதிகாரி சிவ சுப்ரமணியம் இப் பிரதேசங்களில் மக்களது சுகாதாரம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்துமாறு அப் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW