அனைத்து குற்றச்செயல்களுக்கும் ‘கைரேகை’ பதிவு
குற்றச் செயல்களில் ஈடுபடும் அனைவரது ‘கைரேகைகளையும்’ பதிவு செய்யும் வகையிலான சட்டத்திருத்தம் குறித்து ஆராயப்படுகிறது.
குறிப்பிட்டளவு குற்றச்செயல்கள் தொடர்பிலேயே இந்நடைமுறை இருந்து வந்த நிலையில் கைரேகை பதிவு செய்வதற்கான குற்றச் செயல்கள் பட்டியல் விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இது குறித்து ஆராயப்படுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பொலிஸ் கண்காணிப்பில் வைத்திருப்பது குறித்தும் விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.